செய்திகள்
கைது

தர்மபுரி அருகே மது விற்ற 10 பேர் கைது

Published On 2020-06-14 13:06 IST   |   Update On 2020-06-14 13:06:00 IST
தர்மபுரி அருகே மது விற்ற 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தர்மபுரி, அரூர், பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பையர்நத்தம், தொட்டம்பட்டி, எச்.புதுப்பட்டி, தர்மபுரி, பென்னாகரம், பெரும்பாலை ஆகிய பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி விற்றது தொடர்பாக மாதுராஜ் (வயது 44), மணிகண்டன் (25), சிவராஜ் (63), ராணி (50), சிலம்பரசன் (25), ராமன் (49), கணேசன் (35), கண்ணம்மாள் (60), லட்சுமி (37), பெருமாள் (35) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 355 மதுபாட்டில்களும், 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News