செய்திகள்
முக கவசம்

காஞ்சிபுரம் நகராட்சியில் முக கவசம் அணியாத 892 பேருக்கு அபராதம்

Published On 2020-06-13 13:31 IST   |   Update On 2020-06-13 13:31:00 IST
காஞ்சிபுரம் நகராட்சியில் முக கவசம் அணியாமல் வந்த ஒரு நபருக்கு ரூ.100 வீதம், இது வரை 892 பேருக்கு அபராதமாக ரூ.89 ஆயிரத்து 200 விதிக்கப்பட்டு அவர்களிடம் வசூலிக்கப்பட்டது.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சிபுரம் நகரில் பொதுமக்கள் வெளியே வரும் போது கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் நகராட்சியில் முக கவசம் அணியாமல் வந்த ஒரு நபருக்கு ரூ.100 வீதம், இது வரை 892 பேருக்கு அபராதமாக ரூ.89 ஆயிரத்து 200 விதிக்கப்பட்டு அவர்களிடம் வசூலிக்கப்பட்டது. இந்த அபராத தொகை காஞ்சிபுரம் நகராட்சி கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

மேலும் இந்த அபராத தொகை செலுத்தியவர்களுக்கு துணிகளாலான 3 முக கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டு அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர். சமூக இடைவெளியை பின்பற்றாத மளிகை கடை, துணி கடை, பழக்கடை உள்ளிட்ட 15 கடைகள் மூடப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News