செய்திகள்
திருமானூர் அருகே விபத்தில் தொழிலாளி பலி
திருமானூர் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் பெரியசாமி(வயது 28). தப்பாட்ட கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் அன்னிமங்கலத்தில் இருந்து திருமானூர் நோக்கி சென்றார். அப்போது திருமானூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதே அன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் கிருபாகரன்(27) மற்றும் தங்கவேல்(50) ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கிருபாகரன் மற்றும் தங்கவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.