செய்திகள்
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

ஊட்டிக்கு சுற்றுலா வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்- கலெக்டர் எச்சரிக்கை

Published On 2020-06-02 11:10 GMT   |   Update On 2020-06-02 11:10 GMT
ஊட்டிக்கு சுற்றுலா வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.

ஊட்டி:

பொது போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

7 மாவட்டங்களை இணைத்து மண்டலமாக அறிவிக்கபட்டு உள்ளது. இங்கு அத்தியாவசிய தேவைகளுக்கு இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்யலாம்.பஸ் மற்றும் தனியார் வாகனங்களில் வரும் அனைவரின் பெயர்கள் மற்றும் பயணத்திற்கான காரணங்கள் சேகரிக்கப்படும்.

தேவையில்லாத பயணங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும் சுற்றுலா தலங்கள் விடுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. தேவையில்லாமல் சுற்றுலா போல் மாவட்டத்திற்குள் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். வழக்குப்பதிவு செய்யப்படும். தனியார் வாகனங்களில் டிரைவரையும் சேர்த்து 4 பேர் பயணம் செய்யலாம். அதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாகன போக்கு வரத்து தொடங்கி உள்ளதால் வாகன நெரிசல் ஏற்பட்டால் பர்லியார் சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்படும் பொது மக்கள் தேவையில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News