செய்திகள்
திமுக

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7,294 மனுக்களை தி.மு.க.வினர் கலெக்டரிடம் வழங்கினர்

Published On 2020-05-30 12:18 GMT   |   Update On 2020-05-30 12:18 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7,294 மனுக்களை தி.மு.க.வினர் கலெக்டர் திவ்யதர்ஷினியிடம் வழங்கினர்.

ராணிப்பேட்டை:

திமு.க. தலைவர் ஸ்டாலின் அவர்களால் உருவான 'ஒன்றிணைவோம் வா' உதவி எண்னை தொடர்பு கொண்டு ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு கழக நிர்வாகிகள் தொடர்ந்து நிவாரணம் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து இணைய வழியாக பெறப்பட்ட 7,294 பிரதான கோரிக்கைகளை மனுக்களாக தயாரித்து அதனை ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினியிடம் மாவட்ட செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய இணை அமைச்சர் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி, ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஆகியோருடன் கலெக்டரை நேற்று நேரில் சந்தித்து பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தினர்.

இதில்மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் சேஷாவெங்கட், வடிவேலு, நகர பொறுப்பாளர் பூங்காவனம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், நகர துணைசெயலாளர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News