செய்திகள்
விபத்து பலி

உடுமலையில் மினி ஆட்டோ மோதி வாக்கிங் சென்ற ஆசிரியை பலி

Published On 2020-05-30 15:35 IST   |   Update On 2020-05-30 15:35:00 IST
உடுமலையில் மினி ஆட்டோ மோதி வாக்கிங் சென்ற ஆசிரியை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள புக்குளம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு பிரபாவதி என்ற மகள் உள்ளார்.

பிரபாவதி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை 6 மணிக்கு பிரபாவதி தனது பெற்றோருடன் புக்குளம்- உடுமலை சாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்களின் பின்னால் மினி ஆட்டோ ஒன்று வந்தது. அப்போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து வாக்கிங் சென்றவர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்கள் 3 பேரையும் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாவதி பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே மேல் சிகிச்சைக்காக பிரபாவதியின் பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி ஆட்டோ டிரைவர் மணியனை கைது செய்தனர்.

Similar News