செய்திகள்
தற்கொலை

மேட்டுப்பாளையம் அருகே பெயிண்டர் தற்கொலை

Published On 2020-05-30 14:05 IST   |   Update On 2020-05-30 14:05:00 IST
மேட்டுப்பாளையம் அருகே வி‌ஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் நியூஎக்ஸ்டென்சன் 2 வது வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(37). பெயிண்டர். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு 15 வயதில் தனிஷ் குமார் என்ற மகனும் 4 வயதில் லக்சனா என்ற மகளும் உள்ளனர்.சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த செந்தில்குமாரை மனைவி தமிழ்ச்செல்வி கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த செந்தில்குமார் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Similar News