செய்திகள்
மாவட்ட கலெக்டர் பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி

அடிப்படை வசதிகள் குறித்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

Published On 2020-05-26 12:19 GMT   |   Update On 2020-05-26 12:19 GMT
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு முடிந்து, விடைத்தாள்கள் திருத்தும் மையங்களான காஞ்சீபுரம் எஸ்.எஸ்.கே.வி. பெண்கள் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி போன்ற மையங்களில் நாளை(புதன்கிழமை) முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறவுள்ளது. அதையொட்டி, விடைத்தாள் திருத்தும் மையமான காஞ்சீபுரம் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 52 ஆயிரம் விடைத்தாள் திருத்தும் பணிகள் காஞ்சீபுரம் எஸ்.எஸ்.கே.வி.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி போன்ற இரு மையங்களில் மே மாதம் 27-ந்தேதி முதல் தொடங்குகிறது. 545 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் 64 கூர்ந்தாய்வு அலுவலர்கள், 64 முதன்மை தேர்வு அலுவலர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்க உள்ளனர். இவர்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை, கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவிய பின்னரே மையத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவர். மேலும் நகராட்சி மூலம் மையங்களுக்கு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, மாவட்ட கல்வி அதிகாரி மகேஸ்வரி, நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, காஞ்சீபுரம் தாசில்தார் பவானி, நகராட்சி என்ஜினீயர் மகேந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News