செய்திகள்
நவீன எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட காட்சி

காஞ்சீபுரம் நகரில் நவீன கருவி மூலம் கிருமி நாசினி தெளிப்பு

Published On 2020-05-26 12:12 GMT   |   Update On 2020-05-26 12:12 GMT
தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் காஞ்சீபுரம் நகர் முழுவதும் நவீன எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
காஞ்சீபுரம்:

தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில், தீயணைப்பு துறையில் உள்ள நவீன கருவிகள் மூலம் கொரோனா நோய் பரவுதலை தடுக்கும் விதத்தில் கிரிமி நாசினி தெளிக்க மாவட்ட நிர்வாகத்தினருக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தபட்டதன்பேரில் காஞ்சீபுரம் மாவட்ட தீயணைப்பு மீட்புபணிகள் துறையினர், காஞ்சீபுரம் பெருநகராட்சியுடன் இணைந்து காஞ்சீபுரம் நகர் முழுவதும் நவீன எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், உதவி மாவட்ட அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் காஞ்சீபுரம் நகரின் முக்கிய வீதிகளான ராஜவீதிகள், பஸ் நிலையம், அன்னை இந்திராகாந்தி சாலை, சங்கர மடம் சாலை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் அதிவேக மற்றும் ஸ்பிரிங்களர் தெளிப்பான் என்ற நவீன கருவிகள் மூலம் கிருமி நாசினி மருந்து தெளித்து வருகின்றனர்.
Tags:    

Similar News