செய்திகள்
கைது

வில்லியனூர் அருகே மதுபாட்டில் கடத்தி விற்ற 2 பேர் கைது

Published On 2020-05-22 08:07 GMT   |   Update On 2020-05-22 08:07 GMT
வில்லியனூர் அருகே தமிழக பகுதியில் இருந்து மதுபாட்டில் கடத்தி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர்:

கொரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவு காரணமாக புதுவையில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டு உள்ளன.

அதே வேளையில் தமிழக பகுதியில் டாஸ்மாக் மதுக்கடைகள் கோர்ட்டு தடைகளுக்கு பிறகு கடந்த 16-ந்தேதி முதல் இயங்கி வருகிறது.

புதுவையில் மதுக்கடைகள் திறப்பது குறித்து தினம் தினம் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் திறக்கப்படவில்லை.

தமிழகத்தை போல் மதுபாட்டில்களுக்கு கொரோனா வரி விதிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் புதுவையில் மதுக்கடைகள் திறப்பது காலதாமதமாகிறது.

இதனால் புதுவை மது பிரியர்கள் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து மது குடிக்கின்றனர்.

மேலும் சிலர் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி புதுவைக்கு கடத்தி வந்து அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.

அதுபோல் வில்லியனூர் அருகே பிள்ளையார் குப்பம் பகுதியில் தமிழக பகுதியில் இருந்து மதுப்பாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்கப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளுடன் நின்ற 2 பேரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அகரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 36), அகரம் புதுநகரை சேர்ந்த அய்யனார் (35) என்பதும், இவர்கள் 2 பேரும் தமிழக பகுதியில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்றது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 குவார்ட்டர் பிராந்தி பாட்டில் மற்றும் பீர் பாட்டிலும், இதனை கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் மதுப்பாட்டில் மற்றும் மோட்டார் சைக்கிளை கலால்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News