செய்திகள்
மதுபானங்கள்

மதுக்கடை திறக்காததால் திட்டி தீர்த்த குடிகாரர்கள்

Published On 2020-05-20 09:32 GMT   |   Update On 2020-05-20 09:32 GMT
புதுவையில் மதுக்கடைகள் திறக்கப்படாத காரணம் தெரியாமல் மதுக்கடை திறக்கப்படும் என்று சில மணி நேரம் காத்திருந்த மதுப்பிரியர்கள், மதுக்கடையை திறக்க முட்டுக்கட்டையாக உள்ளவர்களை திட்டி தீர்த்தனர்.
புதுச்சேரி:

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் புதுவையில் கள்-சாராயக்கடை உள்பட அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன.

இந்நிலையில் கடந்த 7-ந் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டதால் புதுவையிலும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று மதுப்பிரியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மதுக்கடை திறக்கப்படவில்லை. இதனால் புதுவையை சேர்ந்தவர்கள் மதுபாட்டில்கள் வாங்க தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர். 2 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் புதுவை மது பிரியர்கள் மது வாங்க முடியாமல் திண்டாடினர். ஆனாலும் புதுவையில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அதற்கேற்றார் போல் முதல்-அமைச்சர் நாராயணசாமியும் மதுக்கடை இன்று, நாளை திறக்கப்படும் என்று ஒவ்வொரு நாளும் அறிவிப்பு வெளியிட்டு வந்தார். அதன்படி மதுப்பிரியர்களும் ஆவலாக மதுக்கடைக்கு சென்றனர். ஆனால் மதுக்கடைகள் திறக்கப்படாததால் ஏமாற்றத்துக்குள்ளானார்கள். அவர்கள் மதுக்கடைகள் திறக்கப்படாத காரணம் தெரியாமல் எப்படியும் மதுக்கடை திறக்கப்படும் என்று சில மணி நேரம் அங்கே காத்து கிடந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் மதுக்கடையை திறக்க முட்டுக்கட்டையாக உள்ளவர்களை திட்டி தீர்த்தனர்.

Tags:    

Similar News