செய்திகள்
கைது

ஆலங்குடி அருகே 600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு- வாலிபர் கைது

Published On 2020-05-17 14:23 IST   |   Update On 2020-05-17 14:23:00 IST
ஆலங்குடி அருகே 600 லிட்டர் சாராய ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வாலிபரை கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள பெரியாலூர் கிராமத்தில் சாராய ஊரல் இருப்பதாக ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து ஆலங்குடி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் லதா தலைமையில் தலைமைக்காவலர் பால்ராஜ், அமுதவள்ளி மற்றுமபோலீசார் பெரியாலூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் (வயது 38) என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் 55 லிட்டர் கள்ளசாரயம், 600 லிட்டர் சாராய ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் ராம்குமாரை கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆலங்குடி மது விலக்கு போலீசார் ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நல்லக்கண்ணன முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News