செய்திகள்
கொரோனா வைரஸ் சிகிச்சை - கோப்புப்படம்

கடலூர்- விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 158 பேர் டிஸ்சார்ஜ்

Published On 2020-05-17 08:24 GMT   |   Update On 2020-05-17 08:24 GMT
கொரோனா சிகிச்சையின் மூலம் கடலூர்- விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 158 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கடலூர்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு ஏற்படுத்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஆரம்பத்தில் கட்டுக்குள் இருந்தது. பின்னர், சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு அதிக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்தனர்.

அவர்களை மாவட்ட நிர்வாகம் தனிமைபடுத்தி பரிசோதனை செய்தது. இதில் அவர்கள் நிறைய பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 416 பேராக உயர்ந்தது.தற்போது மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்று கடலூரில் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 50 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களை கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தார். மேலும் அவர்களை வீட்டில் 14 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ள அறிவுறுத்தினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 308 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொரோனா மையம் வார்டுகளில்சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரும், மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தில் 58 பேரும், பெரும்பாக்கம் அரசு மையத்தில் 45 பேரும் உள்பட 108 பேர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பினர்.

அவர்களை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழங்கள், அரிசி, காய்கறிகள் கொடுத்து வழியனுப்பி வைத்தார். மேலும் அவர்களை வீட்டில் தனிமைபடுத்தி கொள்ள அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News