செய்திகள்
மதுபானம்

மீண்டும் தமிழக டாஸ்மாக்கிற்கு படையெடுத்த புதுவை மதுபிரியர்கள்

Published On 2020-05-16 09:29 GMT   |   Update On 2020-05-16 09:29 GMT
தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் புதுவை மது பிரியர்கள் அண்டைமாவட்ட உறவினர்கள், நண்பர்கள் மூலம் மதுபானங்களை பெற்றனர்.
புதுச்சேரி:

புதுவையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மதுபான கடைகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மதுபான பிரியர்கள் போதைக்காக பல்வேறு வழிகளை கையாண்டனர்.

கஞ்சா, வார்னிஷ், ஈஸ்ட், இளநீர், பழக்கலவை ஆகியவற்றின் மூலம் போதை தரும் வஸ்துகளை பயன்படுத்தி வந்தனர். தமிழகத்தில் 7-ந்தேதி டாஸ்மாக் திறக்கப்பட்டபோது அங்கு படையெடுத்து சென்றனர்.

அங்கிருந்து மது பானங்களை வாங்கிவந்து குடித்தனர். 2 நாளில் டாஸ்மாக் மூடியதால் மிகவும் சோகமடைந்தனர். இதனால் புதுவையிலிருந்து ஆந்திரா, கர்நாடகா செல்லும் லாரி டிரைவர்களிடம் பணம் கொடுத்து அங்கிருந்து மதுபானங்களை வாங்கி வரச்செய்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவை மது பிரியர்கள் அண்டைமாவட்டங்களான கடலூர், விழுப்புரம் ஆகியவற்றுக்கு அதிகாலையிலேயே புறப்பட்டு சென்றனர்.

அங்குள்ள உறவினர்கள், நண்பர்கள் மூலம் மதுபானங்களை பெற்றனர். இதனால் புதுவைக்குள் தமிழக மதுபானங்கள் பல்வேறு வழிகளில் தாராளமாக உள்ளே நுழைந்துள்ளது.

Tags:    

Similar News