செய்திகள்
நெய்வேலியில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்
நெய்வேலியில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்ப கோரி வடமாநில தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மந்தாரக்குப்பம்:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் நெய்வேலி, மந்தாரக்குப்பம் மற்று-ம் அதனை சுற்றி உள்ள பகுதியில் தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர்.
தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக 50 நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் வேலை இல்லாமல் உணவுக்கு கூட அல்லல்படும் நிலையில் உள்ளனர். எனவே தமிழகம் முழுவதும் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு புலம்பெயர்ந்து வருகிறார்கள். அதன்படி நெய்வேலில் தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்கள் இன்று காலை சொந்த ஊருக்கு செல்ல நடந்து வந்தனர். நெய்வேலி கியூ பாலம் அருகே வந்த போது அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தகவல் அறிந்த என்.எல்.சி. அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்த வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.