செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Published On 2020-05-14 15:07 IST   |   Update On 2020-05-14 15:07:00 IST
கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆரோவில் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சேதராப்பட்டு:

ஆரோவில் போலீஸ் நிலையத்தில் போலீசார் மற்றும் வணிகர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கினர். மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்திய நெறிமுறைகளை வணிக நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக வானூர் பகுதியில் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் வானூர் சுற்றுவட்டார பகுதிக்கு முக்கிய இடமாக உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் உள்ள வணிகர்கள் வாடிக்கையாளர்கள் வரும்போது அவர்களை சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும். வணிகர்கள் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி வியாபாரம் செய்யக்கூடாது.

கடைகளில் கூடுதல் ஊழியர்களை வைத்து கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை ஒழுங்குபடுத்த வேண்டும். ஒவ்வொரு கடையின் வெளியில் கொரானா தொடர்பான எச்சரிக்கை வாசகங்களை வைத்திருக்க வேண்டும். வணிகர்கள் உரிய நெறிமுறைகளையும் வழிகாட்டுதலையும் பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூறினர்.

இந்தக் கூட்டத்தில் 55 வணிக நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


Similar News