செய்திகள்
விவசாயி

விவசாயிகள் மானியம் பெற காலக்கெடு நீட்டிப்பு

Published On 2020-05-14 14:17 IST   |   Update On 2020-05-14 14:17:00 IST
விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் சுந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண் துறை மூலமாக மத்திய அரசு திட்டத்தின் டிராக்டர், பவர் டில்லர், நெல் நடவு எந்திரம் உள்ளிட்ட அனைத்து மேம்படுத்தப்பட்ட மற்றும் பாரம்பரிய வேளாண் எந்திரங்கள், உபகரணங்களை வாங்குவதற்கான மானிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி நாளை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே விண்ணப்பங்களை நேரடியாக வம்பாகீரப்பாளையம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் உள்ள வேளாண் பொறியியல் பணிமனை அலுவலகத்தில் நாளை மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News