செய்திகள்
இறைச்சியில் விஷம் வைத்து காட்டுபன்றி, நாய்கள் கொலை - வனத்துறையினர் விசாரணை
குன்னூர் அருகே இறைச்சியில் விஷம் வைத்து காட்டுபன்றி, நாய்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் வள்ளுவர் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை ஒட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு ஏராளமான காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த விலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.
வள்ளுவர் நகர் பகுதியை ஒட்டி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இங்கு குன்னூர் நகர பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
வள்ளுவர் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஏராளமான வளர்ப்பு நாய்கள், பூனைகள் உள்ளிட்டவை வளர்த்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த நாய்கள் ஒன்றன் பின் ஒன்றாக வீடுகள் முன்பு மயங்கி விழுந்து இறந்தன. இதேபோல் அந்த பகுதியில் உள்ள மரங்களில் இருந்த 10-க்கும் மேற்பட்ட காகங்கள், காட்டு பன்றி, பூனைகள் உள்ளிட்டவையும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தன. இதை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வனத்துறையினர், மருத்துவதுறை மண்டல இயக்குனர் வெடியப்பன், கால்நடை டாக்டர் ராஜ் முரளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த வனவிலங்குகளின் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், குன்னூர் பகுதியில் வளர்ப்பு விலங்குகள், காட்டு விலங்குகள் மர்மமான முறையில் இறந்ததாக தகவல் வந்தது.
அதன் பேரில் அங்கு வந்து இறந்த விலங்குகள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளோம்.
அந்த பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்ட கோழி இறைச்சி கழிவுகளில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. அந்த இறைச்சிகளை தின்ற பின்னர் நாய்கள், பூனைகள், பன்றி, காகங்கள் இறந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விஷம் கலந்த இறைச்சியை இங்கு கொட்டியது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.