செய்திகள்
கைது

கோத்தகிரி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்த 3 பேர் கைது

Published On 2020-05-02 15:47 IST   |   Update On 2020-05-02 15:47:00 IST
கோத்தகிரி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊட்டி:

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுபிரியர்களை கவர பலர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். இதுவரையில் தடுக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயம் முறை தற்போது டாஸ்மாக் இல்லாததால் தலைதூக்கியுள்ளது. இதனால் போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்தியிருந்தாலும் தொடர்ந்து இதுபோன்ற குற்றங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோத்தகிரி அண்ணாநகர் பககுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவமூர்த்தி (வயது 37), சவுந்திரராஜன் (31), பஞ்சு (37) ஆகிற 3 பேரும் வாகனத்தில் ரகசியமாக கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Similar News