செய்திகள்
அதிமுக

தவறை சுட்டிக்காட்ட அதிமுக தயங்கியதில்லை- அன்பழகன் எம்.எல்.ஏ. அறிக்கை

Published On 2020-05-02 13:59 IST   |   Update On 2020-05-02 13:59:00 IST
தவறை சுட்டிக்காட்ட அதிமுக தயங்கியதில்லை என்று புதுச்சேரி மாநில அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தவறு செய்பவர்கள் அரசாக இருந்தாலும், கவர்னராக இருந்தாலும் மக்களின் நலனிற்காக சுய நலமில்லாமல் தவறை சுட்டிக்காட்ட தயங்காத அ.தி.மு.க. பற்றி விமர்சனம் செய்ய இடதுசாரிகளுக்கு எந்த தகுதியும் இல்லை. தொழிலாளர்களின் தோழன் என கூறும் இடதுசாரிகள் மக்கள் விரோத காங்கிரஸ் கூட்டணி அரசின் தொழிலாளர்கள் விரோத நடவடிக்கைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் ஆட்சியை இடதுசாரிகள் கண்டித்தது இல்லை. தங்களது கொள்கையில் தொழிலாளர் நலன் என்பதை எடுத்துவிட்டு கூட்டணி கட்சிகளின் நலனிற்காக செயல்படும் இடதுசாரிகள் என்று மாற்றிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News