செய்திகள்
வருகிற 5-ந் தேதி மின்தடை செய்யப்படும் இடங்கள்
புதுச்சேரி மரப்பாலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி மரப்பாலம் துணை மின் நிலையத்தில் இருந்து வரும் உயர் மின்னழுத்தப் பாதையில் வருகிற 5-ந் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை எல்லைப்பிள்ளைச்சாவடி (ஒரு பகுதி), டி.ஆர்.நகர், பாக்கமுடையான்பேட், சத்தியா நகர், ஆனந்த ரங்கபிள்ளை நகர், ஞானபிரகாசம் நகர்.
சக்தி நகர், ஆனந்தா நகர், திருமகள் நகர், வேல்ராம்பேட், துலுக்கானத்தம்மன் நகர், முருங்கம்பாக்கம் பேட், கமலம் நகர், அன்னை தெரசா நகர், ஓட்டம்பாளையம், ஆசிரியர் காலனி, பாப்பான்சாவடி, குப்பம்பேட், கொம்பாக்கம், கொம்பாக்கம் பேட் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை புதுச்சேரி மின்துறை செயற்பொறியாளர் கனியமுதன் தெரிவித்துள்ளார்.