செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

கவர்னர் கிரண்பேடி தவறான தகவல்களை தருகிறார்- அமைச்சர் குற்றச்சாட்டு

Published On 2020-05-02 07:40 GMT   |   Update On 2020-05-02 07:40 GMT
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து விட்டு ஏனாம் திரும்பிய தொழிலாளர்களை கவர்னர் கிரண்பேடி உத்தரவின் பேரில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அதை மறைத்து கவர்னர் தவறான தகவல்களை தருகிறார் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து விட்டு ஏனாம் திரும்பிய தொழிலாளர்களை கவர்னர் கிரண்பேடி உத்தரவின் பேரில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அதை மறைத்து கவர்னர் தவறான தகவல்களை கூறியுள்ளார்.

இதேபோல் மீனவர் குடும்பத்தில் குடும்ப தலைவனும், தலைவியும் இறந்துவிட்டால் அந்த குடும்பத்துக்கு இடைக்கால நிவாரண தொகை வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான கோப்புகளை பலமுறை திருப்பி அனுப்பியுள்ளார். கவர்னரின் செயல்பாட்டால் சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்கும் பணி இன்னும் முடியவில்லை. அப்படியிருக்க மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி எப்போது வழங்கப்படும்.

கவர்னர் கிரண்பெடி காவல்துறை அதிகாரியாக இருந்தபோது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அவற்றின் நிலை என்ன?.

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
Tags:    

Similar News