செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

பென்‌ஷன் வி‌ஷயத்தில் விதிப்படியே செயல்பட முடியும் - கவர்னர் கிரண்பேடி தகவல்

Published On 2020-05-01 08:49 GMT   |   Update On 2020-05-01 08:49 GMT
பணி நியமனம், பென்‌ஷன் அனைத்தும் விதிமுறைப்படிதான் செய்ய முடியும் என புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் தொடர்பாக கவர்னர் வாங்கும் சம்பளத்தை குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை முன் வைத்து உள்ளனர். மீனவர்களுக்கு கொடுக்கப்படும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் முழு நேர மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது. வயதானவர்களுக்கு பென்‌ஷன் தரப்படுகிறது.

ஆனால், அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கும்படி கேட்கிறார். இந்தியாவில் எங்கும் இதுபோல கேள்விப்பட்டது கிடையாது.

இப்படி செய்தால் அரசின் மற்ற பென்‌ஷன்திட்டங்களும் பாதிக்கப்படும். எனவே, சட்டவிரோத பரிந்துரைக்கு நாங்கள் ஒப்புதல் தரவில்லை. முழுநேர மீனவர்களுக்கு எப்போதும்போல் நிவாரணம் கிடைக்கும். அமைச்சர் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்ததற்காக பென்‌ஷன் பெற்றார். தற்போது அமைச்சராக இருப்பதால் சம்பளம் வாங்குகிறார்.

ஆனால், அவர் இரண்டுமே பெற முடியாது. அதேபோலத்தான் நான் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்ததற்காக பென்‌ஷன் வாங்கினேன்.

தற்போது கவர்னராக இருப்பதால் என் சம்பளம் பெறுகிறேன். ஒருவர் சம்பளத்தையும், பென்‌ஷனையும் பெற முடியாது. எனவே, பணி நியமனம், பென்‌ஷன் அனைத்தும் விதிமுறைப்படிதான் செய்ய முடியும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News