செய்திகள்
இளநீர்

ஊரடங்கால் முடங்கிய இளநீர் வியாபாரம்

Published On 2020-04-30 11:40 GMT   |   Update On 2020-04-30 11:40 GMT
ஊரடங்கு தடை உத்தரவால் பண்ருட்டியில் இருந்து சென்னைக்கு ஏற்றுமதி ஆகாததால் இளநீர் வியாபாரம் முடங்கி போய் உள்ளது.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கட்டமுத்துபாளையம், பூண்டி, வரிச்சிப்பாக்கம், திருவாம்பூர், சேமக்கோட்டை, அண்ணா கிராமம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1000 ஏக்கரில் தென்னை மரங்கள் உள்ளது. இங்கு காய்க்கும் இளநீர் பண்ருட்டியில் இருந்து சென்னைக்கு லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தினமும் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் இளநீர் அனுப்பப்பட்டு வந்தது.

தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக லாரி போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் சென்னைக்கு இளநீர் அனுப்ப முடியவில்லை. தொடர்ந்து ஊரடங்கு தடை உத்தரவு உள்ளதால் இளநீர் வியாபாரம் முடங்கி போய் உள்ளது. இந்த தொழிலை நம்பி 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். அவர்களும் வேலை இன்றி தவிக்கிறார்கள்.

Tags:    

Similar News