செய்திகள்
கரும்பு

திருபுவனை பகுதியில் கரும்பு அறுவடை தொடக்கம்

Published On 2020-04-30 10:20 GMT   |   Update On 2020-04-30 10:20 GMT
தமிழக கரும்பு ஆலைகள் திறக்கப்பட்டுள்ளதால் திருபுவனை பகுதியில் விளைந்த கரும்பினை விவசாயிகள் வெட்டி தமிழக ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
திருபுவனை:

கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் புதுவை அரசு விவசாய பொருட்களை எடுத்து செல்ல அனுமதி அளித்துள்ளது. தற்போது புதுவையில் கரும்பு ஆலைகள் இல்லாத காரணத்தால் தமிழக கரும்பு ஆலைகள் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் திருபுவனை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் விளைந்த கரும்பினை வெட்டி தமிழக ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

இதனால் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருந்த போதிலும் தமிழக பகுதிக்கு கரும்பை எடுத்து செல்லும்போது தமிழக கரும்பு விவசாயிகள் சிலர் புதுவையில் உள்ள கரும்பு ஆலைகளுக்கு திருப்பி எடுத்து செல்லுங்கள் என்று கோரிக்கை வைக்கின்றனர். இதனால் இரு விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

தற்போது டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 650 விலை போகின்றது. இதில் குருத்து, சோலை கழிவுகள் 10 சதவீதம் வரை கழிந்தது போக மீதி உள்ள விலையினை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது. இதனால் விளைச்சலுக்கான பணம் கிடைப்பது இல்லை. சில விவசாயிகள் விளைநிலங்களை விற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

எனவே இதற்கு புதுவை அரசும், வேளாண்துறை அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News