செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர், போலீசாருக்கும் பரிசோதனை நடத்த பாஜக கோரிக்கை

Published On 2020-04-27 20:21 IST   |   Update On 2020-04-27 20:21:00 IST
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர், போலீசாருக்கும் பரிசோதனை நடத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் சாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர்கள், போலீசார்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். புதுச்சேரியில் எம்.எல்.ஏ.க்களுக்கும், மூத்த அரசு அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது பாராட்டுக்குரியது. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், அவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் செவிலியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

அரியாங்குப்பம், மூலக்குளம், முத்தியால்பேட்டை, திருவண்டார்கோவில், திருபுவனை ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Similar News