செய்திகள்
கோப்பு படம்

போலி உரிமம் சான்றிதழ் தயாரித்து கொடுத்து ஓட்டல் உரிமையாளரிடம் மோசடி

Published On 2020-04-27 08:52 GMT   |   Update On 2020-04-27 08:52 GMT
புதுச்சேரி அருகே போலி உரிமம் தயாரித்து கொடுத்து ஓட்டல் உரிமையாளரிடம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

காலாப்பட்டு அருகே கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி அருகே ஓட்டல் நடத்தி வருபவர் சீனிவாசன்.

கடந்த ஆண்டு இவரது ஓட்டலில் உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது போலியான உரிமம் பெற்று ஓட்டல் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் சீனிவாசனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சீனிவாசனிடம் ரூ.3500 பெற்று திலாஸ்பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்பவர் போலியாக உரிமம் சான்றிதழ் தயாரித்து கொடுத்திருந்தது தெரியவந்தது.

இதையத்து உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவாவிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை தேடி வருகிறார்கள். மேலும் கணேசன் இதுபோன்று பலருக்கும் போலியாக உரிமம் சான்றிதழ் தயாரித்து கொடுத்து பணமோசடி செய்தாரா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Tags:    

Similar News