செய்திகள்
வில்லியனூர் அருகே காசு வைத்து சூதாடிய 4 பேர் கைது
வில்லியனூர் அருகே காசு வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர்:
கரிக்கலாம்பாக்கம் போலீஸ் ஏட்டு முருகன் மற்றும் போலீசார் வில்லியனூர் அருகே உள்ள பெருங்களுர் காலனி பகுதியில் நேற்று மாலை ரோந்துபணி சென்றனர். அப்போது அங்குள்ள கரும காரிய கொட்டகையில் காசு வைத்து சூதாடிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதே காலனியை சேர்ந்த நாகராஜ்(வயது45), ஸ்ரீதர்(39), அசோகன்(42), முரளி (42) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.