செய்திகள்
கைது

ஆலங்குடி பகுதியில் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு-3 பேர் கைது

Published On 2020-04-24 15:30 IST   |   Update On 2020-04-24 15:30:00 IST
ஆலங்குடி பகுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலங்குடி:

ஆலங்குடி பகுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சுவதாக வந்த தகவல்படி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் லதா, சப்-இன்ஸ்பெக்டர் துரை சிங்கம், பாஸ்கர் மற்றும் போலீசார் குலப்பெண் பெட்டி கிராமத்தில் உள்ள பெருமாள் வீட்டை சோதனை செய்தனர். அப்போது பெருமாள் தோட்டத்தில் இருந்த 5 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றினர். மேலும் தோட்டத்தில் 50 லிட்டர் கள்ளச்சாராய ஊரலையும் அழித்தனர்.

அதுபோல் கறம்பக்குடி தாலுகா கருக்காக்குறிச்சி தாழக்கொல்லை முத்தையா என்பவரது கரும்பு தோட்டத்தில் இருந்த 105 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆலங்குடி தாசில்தார் கலைமணிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கீரமங்கலம் வருவாய் ஆய்வளர் முருகேசன், குளமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் தனலெட்சுமி ஆகியோர் சோதனை செய்தனர். இதில் வசந்த் கைதானார்.

Similar News