செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

செந்துறை பகுதி மக்கள் பதட்டம் - 12 வயது சிறுவன் உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா

Published On 2020-04-23 13:58 IST   |   Update On 2020-04-23 13:58:00 IST
செந்துறை அருகே 12 வயது சிறுவன் உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறையில், டெல்லி மாநாட்டில் பங்கேற்ற மருந்தக உரிமையாளருக்கு கொரோனா தொற்று அறி குறி இருந்தது. அவருக்கு நடந்த சோதனையில் தொற்று இல்லை என்று கூறி விடுவிக்கப்பட்டார்.

அவரது மருந்தகத்தில் வேலை பார்த்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராயம்புரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணின் எதிர் வீட்டில் வசித்த 12 வயது சிறுவனுக்கும், பக்கத்து தெருவில் உள்ள 36 வயது லாரி ஓட்டு னருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.

கொரோனா தடுப்பு குழுவினர் அவர்கள் 2 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இது அப்பகுதி மக்கள் இடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே கோட்டாட்சியர் பூங்கோதை, அரியலூர் தாசில்தார் சந்திரசேகர், மாவட்ட திட்ட அலுவலர் சுந்தரராஜன், அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, செந்துறை இன்ஸ்பெக்டர் ராஜ் குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News