செய்திகள்
சூலூர் அருகே பேக்கரியில் பதுக்கி மதுவிற்ற வாலிபர் கைது
சூலூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேக்கரியில் பதுக்கி மதுவிற்ற வாலிபரை கைது செய்தனர்.
சூலூர்:
ஊரடங்கு அமலில் உள்ளதால் போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்தி உள்ளனர். இந்த நிலையில் சூலூர் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் உத்தரவின்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந் ஒரு நபர்ரை பிடித்து போலீசார் விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தார். அவரை சூலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்தனர். அதில் அவர் பெயர் பாலசுப்பிரமணியன் (50) என்றும், பூட்டப்பட்ட பேக்கரிக்குள் கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இது குறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பேக்கரிக்குள் பதிக்கி வைக்கப்பட்டிருந்த 84 மது பாட்டில்களை பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரத்தை கைப்பற்றினர். மேலும் போலீசார் இதில் வேறு யாருக்கம் தொடர்பு உள்ளதா? என பாலசுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.