செய்திகள்
கைது

குட்கா புகையிலை சோதனை : ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் - வாலிபர் கைது

Published On 2020-04-22 17:24 IST   |   Update On 2020-04-22 17:24:00 IST
தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் குட்கா புகையிலை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோட்டார் வட்டவிளை பகுதியில் குட்கா புகையிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கோட்டார் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, சரவணகுமார் ஆகியோர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின்போது வட்டவிளையில் உள்ள குடோன் ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குடோன் உரிமையாளர் வட்டவிளையைச் சேர்ந்த முரளிதரன் (வயது 35) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். சோதனையின்போது ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப் பணத்தையும், மினி டெம்போ ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News