செய்திகள்
சிறுமி சிவானிகா

சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்த சிறுமி

Published On 2020-04-22 16:56 IST   |   Update On 2020-04-22 16:56:00 IST
சைக்கிள் வாங்க உண்டியலில் தான் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு சிறுமி சிவானிகா வழங்கினார்.
நெல்லை:

நெல்லை தச்சநல்லூர் மேலக்கரையை சேர்ந்த சிவநடராஜ்-கார்த்திகா தம்பதியினரின் மகள் சிவானிகா. இவளுக்கு ஒரு வயது முதல் சேமிக்க கற்றுக் கொடுத்திருந்தனர். அந்த சேமிப்பு பணத்தை கொண்டு 2-வது ஆண்டு பிறந்த நாளில் சிறிய சைக்கிள் வாங்கி தருவதாக கூறியதால் உற்சாகத்துடன் பணத்தை சேமித்து வந்தாள் சிவானிகா.

தினமும் பெற்றோரிடம் பணத்தை கேட்டு வீட்டில் வைத்திருந்த உண்டியலில் போட்டு வந்தார். நேற்று அவளுக்கு 2-வது ஆண்டு பிறந்த நாளும் வந்தது. தற்போது கொரோனா தொற்றால் உலகமே முடங்கி போய் உள்ள சூழலில் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தாராளமான நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டு உள்ளது.

இதையடுத்து சிவானிகா தான் சேமித்த பணத்தை பெற்றோர் மூலம் பிரதமர் மற்றும் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.500, முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.250 வங்கி கணக்கில் பரிமாற்றம் மூலம் அளிக்கப்பட்டது.

Similar News