செய்திகள்
செய்யாறு தொகுதியில் 988 அதிமுக கிளை செயலாளர்களுக்கு 25 கிலோ அரிசி- தூசி மோகன் எம்எல்ஏ வழங்கினார்
செய்யாறு தொகுதியில் 988 அதிமுக கிளை செயலாளர்களுக்கு 25 கிலோ அரிசியை தூசி மோகன் எம்எல்ஏ வழங்கினார்.
வெம்பாக்கம்:
செய்யாறு தொகுதி அ.திமு.க. சார்பில் 988 அ.தி.மு.க. ஊராட்சி கிளை செயலாளர்களுக்கு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் 25 கிலோ அரிசி சிப்பம் வழங்கினார்.
இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார்,சிறுபான்மை நலபிரிவு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் டி.ராஜி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.