செய்திகள்
தமிழக அரசு

இலவச ரேசன் பொருட்களை பெற வீடு, வீடாக டோக்கன்- தமிழக அரசு

Published On 2020-04-22 06:16 GMT   |   Update On 2020-04-22 06:16 GMT
அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஏதுவாக வரும் 24, 25 ஆகிய தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்நிலையில் மே மாதத்திற்கான இலவச ரேசன் பொருட்களை பெற வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஏதுவாக வரும் 24, 25 ஆகிய தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும்.
ரேசன் பொருள் வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் டோக்கனில் உள்ள நாள், நேரத்தில் ரேசனுக்கு சென்று பொருள் பெறலாம்.

ரேசன் பொருட்களை டோக்கன், சமூக இடைவெளி நடைமுறையை கடைப்பிடித்து மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News