செய்திகள்
ரேசன் கடையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்ட காட்சி.

இலங்கைச்சேரி கிராமத்தில் ரேசன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்

Published On 2020-04-12 22:20 IST   |   Update On 2020-04-12 22:20:00 IST
செந்துறை அருகே இலங்கைச்சேரி கிராமத்தில் ரேசன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
ஆர்.எஸ்.மாத்தூர்:

அரியலூர்மாவட்டம், செந்துறையில் ஊரடங்கு உத்தரவால் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி, உணவின்றி தவித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு பயன்தரும் வகையில் ரேசன் கடை மூலமாக அனைத்து ஏழை குடும்பங்களுக்கு ரூ.1000 பணம் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.

செந்துறை அருகே உள்ள இலங்கைச்சேரி கிராமத்தில் இயங்கி வரும் பகுதிநேர ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கும் நிழச்சியை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தியா.ராமேஷ் மற்றும் கடையின் ஊழியர் கார்த்தி ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கினர்.

Similar News