செய்திகள்
டாக்டர் ஜோடிக்கு திருமணம் நடைபெற்ற காட்சி.

டாக்டர் ஜோடிக்கு கோவிலில் எளிமையாக நடந்த திருமணம்

Published On 2020-04-10 22:43 IST   |   Update On 2020-04-10 22:43:00 IST
ஈரோட்டில் டாக்டர் ஜோடிக்கு கோவிலில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.
ஈரோடு:

ஈரோட்டை சேர்ந்தவர் டாக்டர் ஆர்.சதாசிவம். இவருடைய மனைவி காந்திமதி. அந்த தம்பதியரின் மகன் டாக்டர் எஸ்.கிருஷ்ணக்கண்ணன். இவருக்கும். திண்டல் வித்யாநகர் பகுதியை சேர்ந்த பி.முத்துதொண்டைமான் எம்.அருணாதேவி தம்பதியரின் மகள் டாக்டர் கே.எம்.ஜெயஸ்ரீ வஞ்சிநாயகிக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. மிகவும் பிரமாண்டமாக இந்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் திருமண நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. எனினும் பெரியோர்கள் நிச்சயித்தபடி நேற்று எளிமையாக திருமணம் நடந்தது. மணமகன், மணமகள் பெற்றோர், மிக நெருங்கிய உறவினர்கள் சுமார் 20 பேர் கூடினார்கள்.

திண்டல் வித்யா நகரில் உள்ள விநாயகர் கோவிலில் புதுமண உறவில் இணைந்த டாக்டர் ஜோடி திருமணம் செய்து கொண்டது. விழாவில் கலந்து கொண்டவர்கள் என்று அனைவரும் முகக்கவசம் அணிந்தும், இடைவெளி விட்டும் நின்று மணமக்களை வாழ்த்தினார்கள். மணமக்களும் முகக்கவசம் அணிந்து இருந்தனர். மணமகனின் தந்தை டாக்டர் ஆர்.சதாசிவம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில மருத்துவர் அணி செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமண ஜோடிக்கு கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News