செய்திகள்
கொரோனா தடுப்பு பணியில்

திருவாரூர் மாவட்டத்தில் 12 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

Published On 2020-04-06 07:14 GMT   |   Update On 2020-04-06 07:14 GMT
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவாரூர் உள்ளிட்ட 12 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக விடுதிகள் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் நகரில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணி, பொதக்குடி, திருத்துறைப் பூண்டி, தைக்கால் தெரு, கடியாச்சேரி, அத்திக்கடை, மேலப்பனையூர், முத்துப் பேட்டை, மன்னார்குடி, திருவாரூர் உள்ளிட்ட 12 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த இடங்களில் வெளி ஆட்கள் செல்லவும், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வெளியே செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த பகுதிகளில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருத்துவக்குழுவினர் அந்த பகுதிகளில் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News