செய்திகள்
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா

அரியலூரில் குடிநீர் பரிசோதனை மையம்

Published On 2020-03-12 17:47 GMT   |   Update On 2020-03-12 17:47 GMT
அரியலூர் மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அரியலூர், ராஜாஜி நகர், கல்லூரி சாலையில் குடிநீர் பரிசோதனை மையம் இயங்கி வருகிறது.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரியலூர் மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அரியலூர், ராஜாஜி நகர், கல்லூரி சாலையில் குடிநீர் பரிசோதனை மையம் இயங்கி வருகிறது. இந்த பரிசோதனை மையத்தில் தண்ணீர் மக்களுக்கு குடிப்பதற்கு உகந்ததா? என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, இங்கு விவசாயத்திற்கு பயன்படுத்தும் நீர், பாசனத்திற்கு பயன்படுத்தும் நீர், கோழிப்பண்ணைக்கு (வளர்ப்பு பறவைகள்) பயன்படுத்தும் நீர், நீச்சல் குளத்திற்கு பயன்படுத்தும் நீர் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நீர் போன்றவைகளை பரிசோதனை செய்வதற்காக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட பயன்பாட்டுகளுக்கான நீரை பரிசோதனை செய்ய ரூ. ஆயிரம் மற்றும் அதற்குண்டான ஜி.எஸ்.டி. 18 சதவீதம் செலவின தொகையாக அரசு நிர்ணயத்துள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள் குடிநீர் பரிசோதனை செய்து பயன்பெறலாம். இது தொடர்பாக அரியலூர் கிராம குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக பொறியாளரை அணுகலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News