செய்திகள்
குடிநீர் இணைப்பு துண்டிப்பு

அரியலூரில் கட்டணம் செலுத்தாத 3 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Published On 2020-03-06 21:54 IST   |   Update On 2020-03-06 21:54:00 IST
அரியலூரில் கட்டணம் செலுத்தாத 3 வீடுகளின் குடிநீர் இணைப்பு நகராட்சி ஆணையர் முன்னிலையில் துண்டிக்கப்பட்டது.
அரியலூர்:

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட சொத்துகளுக்காக 2019-20-ம் ஆண்டிற்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணங்கள், பாதாள சாக்கடை கட்டணங்கள் மற்றும் நகராட்சி குத்தகைதாரர்கள் செலுத்த வேண்டிய கடை வாடகை தொகைகளை செலுத்தக்கோரி அரியலூர் நகராட்சியினால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் அரியலூர் நகராட்சி ஆணையர் குமரன் தலைமையில் ஊழியர்கள் குடிநீர் கட்டணம் வசூலிக்க சென்றனர். அப்போது அரியலூர் அழகப்பா 2-வது தெருவில் உள்ள ஒரு வீடு உள்பட 3 வீடுகளில் குடிநீர் கட்டணம் செலுத்தாததால், அந்த வீடுகளின் குடிநீர் இணைப்பு நகராட்சி ஆணையர் முன்னிலையில் துண்டிக்கப்பட்டது. அப்போது நகராட்சி ஆணையர் குமரன் கூறுகையில், மேலும் 1.4.2018 முதல் உயர்த்தப்பட்ட சொத்து வரி தொகைகளை அரசு அறிவிப்பு படி நிறுத்தி வைக்கப்பட்டு பழைய வரி தொகையையே பொதுமக்கள் செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணங்கள், பாதாள சாக்கடை போன்ற வரி தொகைகளை இணைப்புகள் நகராட்சியினால் துண்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி தொகைகளை மற்றும் குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணங்களை உடனடியாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

Similar News