செய்திகள்
சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு மேற்கொண்டார்.

சீர்காழியில் அம்மா உணவகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2020-02-26 14:57 GMT   |   Update On 2020-02-26 14:57 GMT
சீர்காழி பஸ் நிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு மேற்கொண்டு அங்கு உணவருந்திய பொதுமக்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

நாகப்பட்டினம் , பிப்.26-

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பிரவீன்.பி.நாயர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட் டம் சீர்காழி ஈசானியம் தெருவில் உள்ள வார சந்தை அமைக்கப்படும் இடத் தையும், சீ£காழி புதிய பஸ் நிலையத்தையும் மற்றும் புதிய பஸ் நிலையத் திற்கு அருகேயுள்ள திருத் தோணிபுரம் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

பின்னர் சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக தரைத்தளம் அமைக்கும் பணிகளையும் பார்வை யிட்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து சீர்காழி பஸ் நிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் கலெக்டர் பிரவீன்.பி.நாயர்ஆய்வு மேற்கொண்டு அங்கு உணவருந்திய பொது மக்க ளிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் பிரசாந்த், சீர்காழி நகராட்சி ஆணையர் வசந்தன், நகராட்சி மேற்பார் வையாளர் பாலசுப்பி ரமணியன், தாசில்தார் சண்முகம் மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி அலுவலர்கள் பலர் உடனி ருந்தனர்.

Tags:    

Similar News