செய்திகள்
இறந்து கிடந்த கருஞ்சிறுத்தை

கோத்தகிரியில் கருஞ்சிறுத்தை மர்மச்சாவு

Published On 2020-02-15 15:37 IST   |   Update On 2020-02-15 15:37:00 IST
கோத்தகிரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கருஞ்சிறுத்தையின் உடல் கூறுகள் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது.
கோத்தகிரி:

நீலகிரி வனக்கோட்டம் கட்டபெட்டு வனச்சரகம் கடக்கோடு கிராமம் பகுதியில் உள்ள ஒருதனியார் தேயிலை தோட்டத்தில் கருஞ்சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதைப்பார்த்த தோட்ட தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

கட்டபெட்டு வனவர்கள் சசிதரன் மற்றும் பெலிக்ஸ் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கருஞ்சிறுத்தை இறந்து கிடந்ததை உறுதி செய்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி உதவி வனப்பாதுகாவலர் சரவண குமார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பிறகு, கோத்தகிரி கால்நடை மருத்துவர் ராஜன் பிரேத பரிசோதனை செய்தபின் அதே பகுதியில் எரிக்கப்பட்டது.

உதவி வனப்பாதுகாவலர் சரவணகுமார் கூறும்போது, 3 வயதுடைய பெண் கருஞ்சிறுத்தை நேற்று முன்தினம் இறந்துள்ளது. பொதுமக்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது. உடல் கூறுகள் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது. ஆய்வறிக்கை கிடைத்த பிறகே கருஞ்சிறுத்தை இறப்பு குறித்து முழு விபரம் தெரியவரும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News