செய்திகள்
திருவேங்கடத்தில் மில் தொழிலாளி மர்ம மரணம்
திருவேங்கடத்தில் மில்லில் உள்ள ஓய்வு அறையில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
தேனி காமராஜர் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது57). இவரது மனைவி லட்சுமி பிரியா (47). ரவிச்சந்திரன் திருவேங்கடத்தில் தங்கி இருந்து மில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். லட்சுமி பிரியா குழந்தைகளுடன் தேனியில் வசித்து வந்தார்.
நேற்று ரவிச்சந்திரன் மில்லில் உள்ள ஓய்வு அறையில் படுத்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். நோய் காரணமாக இயற்கையாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை.
இதுகுறித்து லட்சுமி பிரியா அளித்த புகாரின் பேரில் திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.