செய்திகள்
எச் ராஜா

விஜய் எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது- எச்.ராஜா

Published On 2020-02-10 15:01 IST   |   Update On 2020-02-10 15:01:00 IST
விஜய் எல்லாம் எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை:

ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும், ஆகஸ்டு மாதம் பொதுக்கூட்டம் நடத்துவார் என்றும் செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார் என்றும் தமிழருவி மணியன் ஒரு அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.



இந்த நிலையில் தமிழருவி மணியன் பேச்சு குறித்து கருத்து கூறிய பா.ஜனதா தேசிய செயலாளர் எச் ராஜா, ‘ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பேசுவதற்கு தமிழருவி மணியன் யார்?’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

அதுமட்டுமன்றி ‘விஜய் எல்லாம் எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News