செய்திகள்
கொள்ளை

நுங்கம்பாக்கத்தில் மளிகை வியாபாரி வீட்டில் ரூ.2 லட்சம்-19 பவுன் நகை கொள்ளை

Published On 2020-02-10 14:47 IST   |   Update On 2020-02-10 14:47:00 IST
சென்னை நுங்கம்பாக்கத்தில் மளிகை வியாபாரி வீட்டில் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 19 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

நுங்கம்பாக்கம் குமரப்பா சந்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (58). அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

மூன்று தளங்களை கொண்ட அந்த கட்டிடத்தின் தரை தளத்தில் கடை உள்ளது.

முதல் தளத்தில் குடோனும், பணியாளர்கள் தங்கும் இடமும் உள்ளது. இரண்டாம் தளத்தில் ராஜேந்திரனும் அவரது மனைவி சுமதியும் வசிக்கிறார்கள். மூன்றாம் தளத்தில் அவர்களது மகள் வசிக்கிறார்.

நேற்று வழக்கம் போல் ராஜேந்திரன் நடைப்பயிற்சிக்கு சென்றிருந்தார். வீட்டில் தனியாக இருந்த சுமதி கதவை திறந்து போட்டு விட்டு தூங்கி விட்டார்.

மதியம், சுமதி வீட்டில் இருந்த பீரோவில் வைத்திருந்த 19 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை காணாமல் திடுக்கிட்டார்.

இதுபற்றி ராஜேந்திரன் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். காலையில் ராஜேந்திரன் வாக்கிங் சென்றிருந்தபோது பைக்கில் ஒரு வாலிபர் வந்தார். அவர்தான் சுமதி வீட்டில் கதவை திறந்து வைத்திருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நைசாக உள்ளே சென்று நகையை திருடி சென்றிருக்கிறார் என்பது தெரிய வந்தது.

அந்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். அதிகாலையில் துணிச்சலாக வீடு புகுந்து திருடிய இந்த விவகாரம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News