செய்திகள்
வேலூர் சலவன்பேட்டையில் கட்டிட ஒப்பந்ததாரர் கத்தியால் குத்திக்கொலை
வேலூர் சலவன்பேட்டையில் கட்டிட ஒப்பந்ததாரர் கத்தியால் சரமாரி குத்திக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் சலவன்பேட்டை திருப்பூர்குமரன் 2-வது தெருவை சேர்ந்தவர் குட்டி என்ற முருகவேல் (வயது45). கட்டிட ஒப்பந்ததாரர். தன்னுடைய கட்டிட ஒப்பந்த பணியில் மேஸ்திரியாகவும் பணியாற்றி வந்தார். இவர் தினமும் மாலை நரசிங்கசாமி மடம் தெருவில் உள்ள ஆணைகுளத்தம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட செல்வார். நேற்று மாலையும் வழக்கம்போல் அவர் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இந்த நிலையில் அவர் கோவில் அருகில் உள்ள ஒத்தவாடை தெருவுக்கு சென்றார். இரவு 7.30 மணி அளவில் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினர். அதில் நிலைதடுமாறி அங்கிருந்து தப்பியோடினார். எனினும் அவரை மர்மநபர்கள் தாக்கினர். காயத்துடன் ஓடிய அவர் நரசிங்கசாமி மடம் தெருவுக்கு வந்து, கோவில் சுற்றுச்சுவர் அருகே விழுந்து இறந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த முருகவேலை பார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்களும் பயந்து திரும்பிச் சென்றுவிட்டனர்.
முருகவேல் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. மக்கள் அங்கு கூடினர்.
இந்த சம்பவம் குறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் (பொறுப்பு) மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே தகவல் அறிந்ததும் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனும் அங்குவந்து விசாரணை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து முருகவேலின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில் பரபரப்பு நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
முருகவேல் இறந்த இடத்தில் தரையில் உறைந்திருந்த அவரது ரத்த மாதிரிகளை போலீசார் எடுத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், முருகவேல் கோவிலில் இருந்துள்ளார். அவர் திடீரென ஒத்தவாடை தெருவுக்கு சென்றார். அப்போது தான் அவர் மர்மநபர்களால் கொலை செய்திருக்கலாம் என்று கருதுகிறோம். கொலை நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட முருகவேலின் செல்போன் லாக் செய்யப்பட்டிருந்தது. எங்களால் அந்த லாக்கை எடுக்க முடியவில்லை.
கொலை நடந்தது குறித்து தகவல் அறிந்ததும் முருகவேலின் மகள் ஜனனி (10) அங்கு வந்தார். அவரிடம் அந்த செல்போனை கொடுத்துள்ளோம். அதில் ஏற்பட்டுள்ள லாக் எடுக்கப்பட்டால் அதன் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும்.
முதல்கட்ட விசாரணையில் முருகவேல் 2 பேரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
முருகவேலுக்கு சரளாதேவி என்ற மனைவி உள்ளார். கோவில் வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காகணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.