செய்திகள்
மாஸ்டர் படப்பிடிப்பு- என்எல்சி சுரங்கத்தில் பாஜகவினர் போராட்டம்
என்எல்சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது தவறு எனக்கூறி பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை:
விஜய்யின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு என்எல்சி 2-வது சுரங்கத்தில் 2 வது நாளாக நடைப்பெற்று வருகிறது.
இதற்கிடையே விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்எல்சி சுரங்கம் 2ன் முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட இடத்தில் எப்படி அனுமதி வழங்கலாம் என சுரங்கத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உரிய அனுமதியுடன் என்எல்சி சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வருமான வரித்துறை சோதனை முடிந்த நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடக்கும் என்எல்சி சுரங்கம் முன் விஜய் ரசிகர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் 10-ம் வரை படப்பிடிப்பு நடத்த என்எல்சி நிறுவனம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.