செய்திகள்
ரேஷன் அரிசி

சத்தியமங்கலம் அருகே 6 டன் ரேசன் அரிசி கடத்தல்- அதிகாரிகள் பறிமுதல்

Published On 2020-02-07 12:04 GMT   |   Update On 2020-02-07 12:04 GMT
சத்தியமங்கலம் அருகே 6 டன் ரே‌ஷன் அரிசி கடத்த முயற்சி செய்த போது அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்தனர் ரே‌ஷன் அரிசி கடத்த முயற்சி செய்த குற்றவாளிகள் தப்பி ஓடினர் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சதுமுகை கிராமத்தில் ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக சத்தியமங்கலம் வட்ட வழங்கல் அதிகாரி குமரகுருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்தில் சென்று பார்த்த போது பாலு என்பவர் வீட்டில் இருந்து ரே‌ஷன் அரிசி மூட்டைகளை மினி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது அதிகாரிகள் வருவதைக் கண்ட 10 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடினர். அதனைத் தொடர்ந்து வட்ட வழங்கல் அதிகாரிகள் பாலு என்பதும் வீட்டில் சோதனையிட்ட போது வீட்டின் முன்புறம் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி மூட்டைகள் கிடந்தது. மேலும் மினி லாரியில் மூட்டை மூட்டையாக ரே‌ஷன் அரிசி மூட்டைகள் கிடந்தது அதனை கைப்பற்றி வட்ட வழங்கல் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இதில் 75 கிலோ எடை கொண்ட 80 மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதன் மொத்த எடை சுமார் 6 டன் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர் இதனைத்தொடர்ந்து ரே‌ஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர் யார்? எங்கே கொண்டு செல்லபடுகிறது? என்பது குறித்து குற்றவாளிகளை கைது செய்து பின்பு தான் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News