செய்திகள்
மர்ம நோய் தாக்கியுள்ள சம்பா பயிர்கள்

மர்ம நோய் தாக்கி 500 ஏக்கர் சம்பா பயிர் சேதம் - விவசாயிகள் வேதனை

Published On 2020-01-17 10:06 GMT   |   Update On 2020-01-17 10:06 GMT
நாகை அருகே மர்ம நோய் தாக்கி 500 ஏக்கர் சம்பா பயிர் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி நிலத்தில் விவசாயிகள் பிபிடி என்னும் நெல் சாகுபடி செய்து வந்துள்ளனர்.

10 நாட்களில் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மர்ம நோய் தாக்கி நெற்கதிர்கள் எல்லாம் பதராக உள்ளது.

இதனால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வாங்கியும், தனியாரிடம் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சாகுபடி செய்து வந்த விவசாயிகளுக்கு பெரும் அளவு விளைச்சல் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதனை அறிந்த திருக்குவளை வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர் ரெங்கநாதன் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விளைநிலங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது இதில் மர்ம நோய் தாக்குதலால் நெற்கதிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. என அவர் கூறினார்.

மேலும் இந்த வருவாய் இழப்பிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் அந்த பகுதி விவசாயிகள் விரிவாக்க மைய அலுவலரிடம் மனு அளித்தனர். இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என அவர் கூறினார்.

Tags:    

Similar News