செய்திகள்
வேலுநாச்சியார் சிலைக்கு அமைச்சர் பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்தபடம்.

ராணி வேலு நாச்சியார் பிறந்தநாள் விழா

Published On 2020-01-04 23:34 IST   |   Update On 2020-01-04 23:34:00 IST
ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்ற முதல் பெண்மணி ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சிவகங்கை:

ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்திய சுதந்திர போரை தொடங்கி வெற்றி கண்டவர் ராணி வேலுநாச்சியார். இவருக்கு தமிழக அரசின் சார்பில் சிவகங்கையில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை அரசு விழாவாகவும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ராணி வேலு நாச்சியாரின் 290-வது பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி ராணி வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சா் பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடா்ந்து மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், சிவகங்கை இளைய மன்னர் மகேஸ்துரை மற்றும் முக்கிய பிரமுகா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வட்டாட்சியர் மைலாவதி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் சசிகுமார், கூட்டுறவு வங்கி தலைவா்கள் ஆனந்த், ராஜா மற்றும் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பாண்டி, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் கருப்பணராஜவேல் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை ஊழியர்கள் செய்திருந்தனர்.

Similar News